நயன்தாராவின் சாமுத்ரிகா லட்சணம்?!


சாமுத்ரிகா லட்சணம்னா என்னான்னு நெறைய பேருக்கு தெரியும்னு நெனக்கிறேன்.

தமிழ்மணத்துல இப்ப ஒரே களேபரமா இருக்கிறதால டென்ஷனை கொஞ்சம் கொறைக்கல்லாம்னு சினிமா வலைப் பக்கம் போய் நம்ம கனவுக் கன்னிகளை தேட ஆரம்பிச்சதுல மாட்டின நயன்தாராவை உத்துப் பாத்ததில (போட்டோவைத்தான்) ஒரு விஷயத்தைக் கண்டுபிடிச்சு, அதைப் பத்தின ஆராய்ச்சியில இறங்கினதல கண்டுபிடிச்ச ஆராய்ச்சி முடிவுகளை வலைப்பதிவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற உயர்ந்த! எண்ணத்துல போட்ட இந்தப் பதிவுல என்ன சொல்ல வர்றன்னா

உதட்டுக்கு மேல கீழுதடோ மேலுதடோ கருப்பு மச்சம் இருந்ததுன்னா அவங்க(பெண்கள்) அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்னு தெரிய வருது. மேலும் விவரம் வேணுங்கறவங்க இங்க போய் பாருங்க

ரொம்ப அழக்க்க்க்க்க்க்க்க்க்க்க்கா இருக்கு இல்ல.



அட மச்சத்த சொன்னங்க!!!

இந்த ஆராய்ச்சி முடிவப் பாத்து எனக்கு ஏசி அய்யா டாக்டர் பட்டம் குடுக்க யாராவது ரெகமண்ட் செய்யறீங்களா??

Hint: நயனுக்கு மச்சம் எங்க இருக்குன்னு தெரியனும்னா படங்களை கிளிக் பண்ணி பாருங்க.

படங்கள் தினமலர்

குப்பைகள் அகற்றப் பட வேண்டும்

குப்பைகள் எங்கும் நிறைந்துள்ளன. சரியான நேரத்தில் முறையாக குப்பைகளை அகற்றாததனால் வீதியெங்கும், நகரெங்கும் துர்நாற்றம். இதனால் பல வியாதிகளும், தொற்று நோய்களும் பரவக் காரணமாகிறது. குப்பைகளை அகற்றுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட அதை முறையாக பிரித்துதெடுத்துமீண்டும் வெளிவராதவாறு புதைக்கப் பட வேண்டும்.

மேலும் தன் வீட்டை சுத்தமாக வைத்திருக்க குப்பையை குப்பைத் தொட்டியில் போடாமல் தெருவில் குப்பை கொட்டுபவர்களும் சற்று பொறுப்புடன் நடந்து கொண்டால் வீடு மட்டுமல்ல தெரு, நகரம் அனைத்துமே சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும், மற்றவர்கள், புதிதாக நகருக்கு வருபவர்களுக்கும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் சிறந்ததாகவும் இருக்கும்.





செய்தி : சென்னை நகரில் குப்பைகள் அள்ளப் படாததால் தொற்று நோய் பரவும் அபாயம். (மக்கள் தொலைக் காட்சி செய்தி, நாள் ஆகஸ்ட் 31, 2007)

சென்னை மாநகர போலீசார் குப்பையை அகற்றினர். ( தின மலர்)

யாருக்கும் வெட்கமில்லை!!!

ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவனுக்கு வெட்கமென்ன
ஏ சமுதாயமே!!!

புலியை கண்டேன் (போலியை அல்ல)

தலைப்பைக் கண்டு பயப்படவேண்டாம். இது வேற விசஷயம்.

முதல்ல இந்த படத்தைப் பாருங்க.




நீங்க ஹோமம் நடத்துவது பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். பல விதமான ஹோமங்கள் பல விதமான காரணங்களுக்காக. (அதைப் பற்றியதல்ல இந்தப் பதிவு)

இப்ப அதுல ஒரு வகை 'சண்டி ஹோமம்' என்பது. இதை பற்றிய மேலதிக தகவல்கள் ஆங்கிலத்தில் இங்கே இருக்கு.

முக்கியமானத மட்டும் தமிழில் (மொழிபெயர்ப்பில் தவறிருந்தால் மன்னிக்கவும்)

இந்த ஹோமம் எதுக்குன்னா 'ஒருவனுடைய/பலருடைய முன்னேற்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள தடைகளை நீக்குவதற்காக' என்று சொல்றாங்க.

இதை எப்படி பாக்கணும்னா 'துர்கா தேவி புலியின் மேல் பயணம் செய்வதாகவும், நாம் துர்கையின் மடியில் குழந்தையாகவும் இருக்கிறோமாம்'.

உங்களுக்கு எதுனா தெ(பு)ரியுதா?

நீங்க கணக்குல பு(எ)லியா?

ஒரு சின்ன கணக்கு.

கடைசி பென்ச் கூட சுலமபமா சொல்லிடலாம் விடையை. முயற்சி செஞ்சு பாருங்க.

ஒரு ஊர்ல ஒரு பொண்ணு இருந்தாளாம். (ஆரம்பிச்சுட்டாங்கய்யா). அந்தப் பொண்ணுக்கு எத்தனை வயசுன்னு கேக்கற 'ஜொள்ஸ்' ல்லாம் ஓரங்கட்டேய்.

சந்தைக்கு போகறதுக்காக பஸ்ல நின்னுக்கிட்டிருந்தாளாம். (சைட் அடிச்சா 'உள்ள' தள்ளிடுவாங்க. ஜாக்கிரதை)

அந்தப் பொண்ணு ஏழு பை வச்சிருந்தாளாம்.

ஒவ்வொரு பையிலும் ஏழு 'அம்மா' முயல் ('அந்த' அம்மா இல்ல) இருக்குதாம்.

ஒவ்வொரு 'அம்மா' முயலுக்கும் ஏழு குட்டி முயலாம்.

இப்ப கேள்வி என்னான்னா....

மொத்தம் எத்தனை முயல்னுதானே கேக்கப் போறே?

ஏம்பா யாருப்பா அது? கணக்க முழுசா சொல்லி முடிக்கறதுக்குள்ள குறுக்கால முந்திரி கொட்டை மாதிரி.

சரி இப்ப கேள்வி என்னான்னா...


அந்த பஸ்ல மொத்தம் எத்தனை கால்கள்?????

பி.கு: அ) அந்த பஸ்ல வேற யாரும் இல்ல.
ஆ) நீங்க புடிக்கிற முயலுக்கு மூணு காலெல்லாம் சொல்லப் படாது.

கூட்டி கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும்


கணக்கு போட்டு ரொம்ப மண்ட காய்ஞ்சவங்களுக்காக... ஒரு ஜாலி

எப்படித் தான் இப்படியெல்லாம் யோசி(கடி)க்க முடியுதோ !!!

எனக்கு மின்னஞ்சலில் வந்த சமீபத்திய சங்கங்களின் பட்டியல். மணிவண்ணன் என்பவர் தொகுத்திருக்கிறார்.





ஞாநியும் செக்ஸ் கல்வியும்

சில பேர் எழுதலாங்கறாங்க. சில பேர் கூடாதுங்கறாங்க. நம் நாட்டில் பாலியல் பற்றியும், பாலியல் கல்வி பற்றியும் போதிய விழிப்புணர்வும், புரிதல்களும் இல்லை.

நாம சொல்ல வந்த விடயத்துக்கு வருவோம்.

சில தொழில்கள் செய்பவர்களை Professionals என்று சொல்வோம். மருத்துவர்கள், பொறியாளர்கள் ஆகியோர். இது சம்பந்தப் பட்ட செயல்களை இவர்கள் தான் செய்ய வேண்டும். குறிப்பாக மருத்துவர்கள். ஏனென்றால் இதனால் ஏற்படும் விளைவுகள் மீளப் பெற முடியாதவை.

செக்ஸ் கல்வியும் இது போலத் தான். இதற்கு முறையான மருத்துவர்கள் மட்டுமே ஆலோசனை சொல்ல முடியும். சொல்ல வேண்டும். ஒரு பதிவர் எழுதி இருக்கிறார் அனுபவ அறிவு இருந்தால் போதும் என்று. யாருக்கு இல்லை இங்கு அனுபவம். உங்களுக்கிருக்கிறது. எனக்கிருக்கிறது. ஆனால் அனுபவம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப் படுகிறது இல்லையா. அப்பதிவரின் அனுபவத்தை எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள்.

//ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.//

//ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.//

எனக்கு கூட ஜுரம் வந்தால் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று அனுபவ அறிவு இருக்கிறது. இருந்தாலும் நாம் ஏன் மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஜூரம் என்பது மற்ற நோய்களுக்கான முன்னறிவிப்பே. இது மருத்துவரால் மட்டுமே சரியாக கண்டறியப் பட்டு அதற்கேற்றார்போல் மருந்து கொடுக்கப் படுகிறது. இது திருப்பதியில் போய் மொட்டையைத் தேடும் கதையில்லை.

முறையான மருத்துவக் கல்வியும் ,அறிவும், தேர்ந்த அணுகுமுறையும் இன்றி பாலியல் கல்வி கற்பிக்கப் பட்டால், தவறான பின் விளைவுகளையே ஏற்படுத்தும்

ஞாநி ஒரு பத்திகையாளராக இருக்கலாம். ஆனால் அவர் செக்ஸ் கல்வி (கவனிக்கவும்) பற்றி எழுதுவது என்பது சுயவைத்தியம் பார்ப்பது போலாகும்.

அனுராதா ரமணன் அந்தரங்க ஆலோசனை சொல்வதற்கும், மாத்ருபூதம் ஆலோசனை சொல்வதற்கும் வித்தியாசமில்லையா?

அனுராதா ரமணனுக்கு சமூகப் பார்வை. மாத்ருபூதத்திற்கு மருத்துவப் பார்வை.

மற்றபடி, யார் வேண்டுமானாலும் பத்திரிகையாளனாகலாம். எழுத்தாளனாகலாம். பொறியாளராகலாம். (எங்க ஊர் மேஸ்திரி எட்டு கூட தாண்டல. ஆனா சூப்பரா வீடு கட்டுவாரு.)

ஆனால் மருத்துவராக முடியாது. அதைப் பற்றி எழுத முடியாது என்பது என் புரிதல்.

என் பதிவு திருடப் பட்டது

திருடர்களில் பலவகை உண்டு. இது கணினி யுகம் இல்லையா?.

நான் போட்ட பதிவை அப்படியே அச்சு மாறாமல் இவர் தன்னுடைய பதிவில் ஏற்றியிருக்கிறார்.

அய்யா சாமி நீ நல்லாயிரு.

எனக்கு இதில் ஏதும் வருத்தமில்லை. ஒரு தகவல் பல பேரை சென்றடைய வேண்டும் என்ற ஆர்வத்தில் செய்திருக்கலாம். குறைந்தது சில மாற்றங்கள் செய்திருந்தாலோ அல்லது எங்காவது ஒரு மூலை என் பதிவின் சுட்டியை மேற்கோள் காட்டியிருந்தாலோ போதுமே.

நீங்கள் என் பதிவுக்கு இணைப்பு கொடுக்கவில்லை. அதனாலென்ன நான் கொடுக்கிறேன் இணைப்பு உங்கள் பதிவுக்கு


இருந்தாலும் கேக்கறேன்...

ஏன் இந்த கொலைவெறிதனம்.???


ஏற்கனவே தீபா இதைப் பற்றி எழுதியிருக்கிறார்.

தயாநிதியின் ஆங்கில மோகம்?

தொலைக் காட்சியில் செய்திகளைப் பார்க்கும் போதெல்லாம் நீங்கள் ஒன்றை கவனித்திருக்கக் கூடும்.

செய்திக்காக பேட்டி எடுக்கும் போது தமிழக அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகள் சிலர் தமிழைத் தவிர்த்து ஆங்கிலத்தில் வலுக்கட்டாயமாக பேசுவதை.

நேற்று 'மக்கள்' தொலைக்காட்சியில் மா.நன்னன் அவர்கள் தமிழில் பேசுவதின் முக்கியத்துவத்தை மிக அழகாக சொன்னார். அதில் தமிழ் வார்த்தை 'கமுக்கமாக ' என்பதைப் பற்றி விளக்கினார். உண்மையில் சொல்லப் போனால் இந்த வார்த்தை தமிழ் தான் என்று இதற்கு முன்பு வரை எனக்கு தெரியாது. நான் இதை 'சென்னை மொழி' என்றே நினைத்து வந்தேன். கமுக்கம் என்பதின் அர்த்தம் 'இரகசியம்' என்ற வடமொழியின் பொருள் தருகிறது.

தமிழர்கள் தமிழை புறக்கணித்தால் ஏற்படும் விளைவுகளையும், அருகி வரும் மொழிகளில் தமிழும் ஒன்று சொன்ன போது உண்மையாகவே வலித்தது.

அடுத்து சன் தொலைக்காட்சியின் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது சன் பவுண்டேஷன் ஒரு கல்லூரிக்கு 23 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்து விட்டு மாணவி(வர்க)ளிடம் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

தமிழ் நாட்டில், அதுவும் தமிழ் மாணவர்களிடம், தமிழில் பேசினால் என்ன குறைந்தா போய்விடுவார்?. நாம் என்ன இலக்கியத் தமிழிலா பேசச் சொல்கிறோம். (அதுக்காக ஒண்டிக்கு ஒண்டி வர்றியா என்றெல்லாம் பேசக் கூடாது) .தமிங்கிலீசில் பேசியிருந்தாலும் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம்.

இவரை ஒப்பிடும் போது லத்திகா சரண் எவ்வளவோ தேவலை. அவர் தமிழ் பேசும் அழகே அழகு. அவர் கூடுமானவரை தமிழிலேயே பதில் சொல்லும் போது எவ்வளவு பெருமையாக இருக்கிறது. இவரைப் போல இன்னும் பலர்.

தமிழர்களிடம் தமிழில் பேசுவதில் என்ன தயக்கம்?. என்ன கேவலம்?.

தமிழ் படிக்க மறுத்(றந்)து விட்டால் வரும் இழப்பு நமக்கே.

நீங்கள் 'நோக்கியா" கைப் பேசி உபயோகிப்பவரா?

ஆம் எனில் உங்களுக்காக...

'நோக்கியா' நிறுவனம் தன்னுடைய கைப்பேசியில் பயன்படுத்தப்படும் பேட்டரியில் சிறிய குறைபாட்டினை கண்டறிந்துள்ளது. உங்களுடைய கைப்பேசியில் உள்ள பேட்டரி சரியானதா எனக் கண்டறிய கீழே உள்ள சுட்டியை சுட்டுங்கள்.

http://batteryreplacement.nokia.com/batteryreplacement/en/

இங்கு சென்று உங்கள் பேட்டரியின் வரிசை எண்ணை கொடுத்தால், அது சரிபார்க்கப் பட்டு, உங்கள் பேட்டரி குறைபாடுள்ளதெண்றால் 'நோக்கியா' நிறுவனம் அதை மாற்றித் தருகிறது.

என்னுடைய கைப்பேசியின் பேட்டரியும் இதன் கீழ் வருகிறது.

(பேட்டரிக்கு என்ன தமிழில்???)

நான் ப்ராமணன் இல்லை

என் சொந்த வாழ்க்கையை பதிவு செய்யும் "ஆட்டோகிராப்' பதிவு இது.

என்னுடை இன்றைய வளர்ச்சிக்கு காரணமான என் பாட்டிக்கு இந்த பதிவு சமர்ப்பனம்.

நாங்கள் வசிப்பது பிராமணர் தெருவில் தான். ஆனால் நாங்கள் பிராமணரல்ல. எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்தே என் தாயார் ஒரு ஐயங்கார் வீட்டில் தான் வேலை செய்து வந்தார். அந்த வீட்டில் ஒரே ஒரு பாட்டி மட்டும் தான். அவர்களுக்கு குழந்தை இல்லை. அது ஐயர் தெரு என்பதால் மற்ற ஜாதிக் காரர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம். யாரும் அவர்களின் வீட்டிற்குள் அனுமதி கிடையாது. கொல்லைப்புறமாகத் தான் சென்று வீட்டு வேலை செய்ய வேண்டும். காபி குடுத்த தம்ளரை கழுவி வைத்தாலும் அவர்கள் அதன் மேல் தண்ணீர் தெளித்து தான் கொண்டு செல்வார்கள். அவர்களைத் தொடக்கூடது. தொட்டுவிட்டால் அவ்ளோ தான். பயங்கரமாக திட்டுவார்கள். ஆனால் மேற்சொன்ன அத்தனை கட்டுப்பாடுகளையும் உடைத்து அந்த பாட்டியிடம் நான் விளையாடுவேன். அவர்களின் பூஜை அறையையும், சமையல் அறையையும் விட்டு வைக்க மாட்டேன். அவர்களைத் தொட்டு விட்டால் கூட கடிந்து கொள்ள மாட்டார்கள்.

இதனால் மற்ற ஐயர் வீட்டினரெல்லாம் அந்த பாட்டியிடம் சென்று இது மாதிரியெல்லாம் சூத்திரர்களை அனுமதிக்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் பாட்டி கண்டுக்கவே மாட்டாங்க. ஆனால் பாட்டியின் சொந்தக் காரங்க யாராவது வந்தா மட்டும் நான் கொஞ்சம் 'அடக்கி வாசிப்பேன்'. அவர்களின் வீட்டிலேயே படிப்பது, விளையாடுவது, தூங்குவது (என் வீட்டிலுள்ள அனைவரும்), பாட்டிக்கு கடைக்கு செல்வது, கோயிலிக்கு கூட்டி செல்வது எல்லாமே.

என் வீட்டில் அசைவம் செய்தால் மட்டும் அவர்களின் பூஜை அறைக்குள் நுழைய விட மாட்டார்கள். எங்கள் வீட்டில் வடை , பாயாசம் செய்தால் மற்ற யாருக்கும் தெரியாமல் கொண்டு போய்க் கொடுப்போம். எங்களுக்கு அவர்கள் செய்த உதவிகள் ஏராளம்.

அந்த கால கட்டத்தில் (1975-1990) இந்த மாதிரி முற்போக்காக யாரும் அந்தத் தெருவில் கிடையாது. சிறுவயதில் ஒருமுறை பாட்டியிடம் விளையாட்டாக 'ஐ லவ் யூ!' என்று சொல்லி அதற்கு பாட்டி என் வயசு என்ன? உன் வயசென்ன? நீ எப்படி என்னைப் பார்த்து சொல்லலாம் என்று கொஞ்சம் டென்ஷாகி விட்டார்கள். என் அம்மாவிடம் புகாரிட்டார்கள். நான் பாட்டியை சமாதானப் படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. அவர்களுக்கு லவ் என்பதின் அர்த்தம் காதல் மட்டுமல்ல, பாசம், நேசம், பரிவு, அன்பு என்று கூறிய பிறகு கொஞ்சம் சமாதானமடைந்தார்கள்.

எங்களுக்கு படிப்பின் அருமையை சொல்லிக் கொடுத்ததே அவர்கள் தான். சில சமயம் விளையாட்டாக ' ஆமா இவரு படிச்சு பெரிய ஐஏஸ் ஆபிசராவப் போறாரு. அமெரிக்கா போகப் போறாரு என்று கூறுவார்கள். இந்த பேச்சே எங்களை படிக்க தூண்டியது. அவர்கள் கூறியபடி ஐஏஸ் ஆபிசரோ அல்லது அமெரிக்காவோ போகவில்லை என்றாலும் கிட்டத் தட்ட ஆசியாவை சுற்றியிருக்கிறேன். ஆனால் எங்களின் வளர்ச்சியைப் பார்க்க அவர்கள் இல்லை. என் வளர்ச்சி ஏணியின் ஒவ்வொரு படிக்கட்டினை ஏறும் போதும் அவர்களை நினைக்கத் தவறுவதில்லை.

சொல்லுங்கள் இப்போது. இந்தப் பாட்டி பிராமணனா? மனிதனா??கடவுளா???

சிங்கத்தைச் சுட்ட 'குடை'?

சற்றுமுன்னில் வந்த இந்த செய்தியைப் படித்தவுடன் ஏனோ எனக்கு எங்கோ படித்த இந்த ஜோக் தவிர்க்க முடியாமல் ஞாபகம் வந்தது.

ஏறக்குறைய 90 வயதான கிழவர் தன்னுடைய வருடாந்திர மருத்துவ சோதனைக்காக டாக்டரிடம் சென்றார்.

அவரை பார்த்த டாக்டர் " எப்படி இருக்கிறீர்கள்"

"நன்றாக இருக்கிறேன் டாக்டர். முக்கியமான விஷயம். என்னுடைய 20 வயது மனைவி கர்ப்பமாக உள்ளாள். அடுத்த மாதம் டெலிவரி" என்றார் மகிழ்ச்சியாக.

டாக்டர் சிறிது யோசனைக்குப் பின்னர் " ஒரு கதை சொல்லட்டுமா"

"எனக்கு தெரிந்த ஒருத்தர் நல்ல வேட்டையாடுபவர். தவறாமல் வேட்டைக்குச் சென்று விடுவார். இப்படித்தான் ஒரு நாள் வேட்டைக்கு கிளம்பும் போது, அவசரத்தில் துப்பாக்கிக்குப் பதிலாக குடையை எடுத்துச் சென்று விட்டார். காட்டில் அங்கே ஒரு சிங்கம் குகைக்கு வெளியே இருப்பது கண்டு, தன்னுடைய குடையை சிங்கத்துக்கு எதிராக பிடித்து 'டுமீல்'. சிங்கம் உடனே அடிபட்டு செத்து விழுந்தது."

குறுக்கிட்ட கிழவர் " முடியவே முடியாது. அதெப்படி குடையால் சுட முடியும். வேறு யாராவது சுட்டிருக்க வேண்டும்" என்றார்.


டாக்டர் " மிகச் சரியாக சொன்னீர்கள். அதைத் தான் உங்களுக்கும் சொல்ல வந்தேன்"

கரணம் தப்பினால்



என்னவாகும்?!

ஆமா 'கும்மி'ன்னா என்னாங்க

ஒரு தமிழ்ப் படத்துக்கான கதை (கிளைமாக்ஸ் மறந்து போய் தவிக்கிறேன்)


ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல மிகுந்த பிரயத்தனப்பட்டு நேரம் கேட்டிருக்கிறேன். அவர் பல படங்களை வெற்றிகரமாக தயாரித்தவர். அவரிடம் கதை சொல்வது மிகக் கடினம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். உங்களிடம் ஒருமுறை கதையைச் சொல்லி முன்னோட்டம் பார்த்துக் கொள்கிறேன்.

ஒரு ஊர்ல ஒரு அப்பா, அம்மா, பையன் இருந்தாங்க. பையனுக்கு ஒரு அஞ்சு வயசு இருக்கும். சந்தோஷமா இருக்காங்க. அப்போ குடும்பதோட ஒரு டைட்டில் சாங். சாங் முடிஞ்சவுடனே அம்மா ரெண்டாவது பிரசவத்துக்கு ஆஸ்பிடல்ல அட்மிட் ஆகறாங்க.

அதே சமயத்துல வேற ஒரு பார்ட்டியும் அட்மிட் ஆகறாங்க. ரெண்டு பேருக்கும் ஒரே சமயத்துல கொழந்த பொறக்குது. ரெண்டுமே பெண் குழந்தைங்க.ரொம்ப அழகா இருக்காங்க. அப்ப நர்சு கொழந்தைய சுத்தம் பண்ணி அந்தந்த அம்மாக்கள் கிட்ட வைக்கும் போது கொழந்தைங்க மாறிப்போயிடுது.

ரெண்டு அம்மாக்களுக்கும் கண்முழிச்சு பார்க்கும் போது பெட்ல இருக்கற கொழந்தையக் கண்டு சந்தோஷப் படறாங்க. தான் பெத்த கொழந்த தான்னு நெனச்சுக்கறாங்க.


பையன் (ஹீரோ) பெரிசு ஆயி அமெரிக்கால்லாம் போய் பெரிய?! படிப்பு படிச்சுட்டு ( அங்க ஒரு சாங் போட்டுரலாம்) இண்டியா திரும்பி வர்றார் பிளைட்ல. அதே பிளைட்ல நம்ம ஹீரோயினை மீட் பண்றார். எப்டீன்னா ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து சீட். அப்ப ஹீரோ தூங்கும் போது ஹீரொயின் மேல சாய்ஞ்சு விழறார்(உண்மையா தாங்க). அப்ப ஹீரோயின் டிஸ்டர்ப் ஆயி ஜெண்டிலா இருக்காங்க. மறுபடியும் தூங்கி மேல விழறார் ஹீரோ. இப்ப ஹீரோயின் டென்ஷனாயி ஏர்ஹோஸ்டஸ் கிட்ட கம்ப்ளெய்ன் பண்றாங்க. ஹீரோ கடுப்பாயிட்டு முறைக்கிறார் ஹீரோயினை.(சீக்குவன்ஸ் கரெக்டா வருதுங்களா)

ஆனா எதுவும் பேசிக்கல. மெட்ராஸ் ஏர்போர்ட்ல ஹீரோ மற்றும் ஹீரோயினோட பேரண்ட்ஸ் இவங்களை ரிசீவ் பண்ணும் போது ஹீரோவோட பேரண்ட்ஸ ஹீரோயினுக்கும், ஹீரோயினோட பேரண்ட்ஸ ஹீரோவுக்கும் அறிமுகம் செய்து வைக்கிறாங்க. வேற வழியில்லாம அறிமுகம் ஆயிக்கறாங்க. ( சொல்ல மறந்துட்டேனே ரெண்டு பேரோட அப்பாக்களும் ஒரே மாதிரியான பிஸினஸ் செய்றவங்க. போட்டின்னு வச்சுக்கங்க).

நம்ம ஹீரோ தன்னோட அப்பாவோட பிசினஸை பெரிய லெவெலுக்கு கொண்டு வர்றார். அமெரிக்காவுல படிச்சவரில்லையா...அப்புறம் ஒரு நாள் ஒரு ஓட்டல்ல உள்ள கிளப்புக்கு போறார். அப்ப ஹீரோயினும் அந்த ஓட்டலுக்கு வர்றாங்க.(கண்டிப்பா ஒரு குத்து பாட்டு கியாரண்டி). பாட்டு முடிஞ்சதும் வில்லங்க ஹீரோயின் கிட்ட தகறார் பண்ணப் போக, அத நம்ம ஹீரோ தடுக்க, பெரிய சண்டையெல்லாம் போட்டு ஹீரோயின டச் பண்ணிடறார்.(மனச தாம்பா)
ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் லவ்ஸ் ஸ்டார்ட் ஆயிடுது.(இப்ப பாட்டு வைக்கலன்னா நல்லா இருக்காது).

இந்த விஷயம் ரெண்டு பேரோட வீட்டுக்கும் தெரிய வர, கல்யாணத்துக்கு ஒத்துக்கிடறாங்க. ( ஹீரோயினோட அப்பா பிசினஸையும், சொத்தையும் குறி வச்சு கல்யாணத்துக்கு ஒத்துக்கிடறார்னு உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை)

இந்து முறைப்படி கல்யாணமும் ஆச்சு. இப்பத் தாங்க கதையில டர்னிங் பாயிண்டே வருது. அப்ப தான் ஒரு பெரிய அதிர்ச்சி தெரிய வருது. நம்ம கல்யாணப் பொண்ணு (ஹீரோயின்) வேற யாருமில்ல. தன்னோட சொந்தத் தங்கச்சி தான்னு. எப்படின்னா அந்தக் கல்யாணத்துக்கு அந்த நர்சம்மாவும் வந்திருக்காங்க. அவங்க தான் சொல்றாங்க. பிளாஷ்பேக் காட்றோம். (அவங்களுக்கு எப்படி தெரியுமுன்னா மெடிகல் ரிப்போர்ட் செக் பண்ணி பாக்கும் போது கொழந்தைங்க மாறியிருப்பது பாத்து ஷாக் ஆயிடறாங்க. அத வெளியில சொன்னா தன்னோட வேலை போய் விடுமோன்னு பயந்து யாருக்கும் தெரியாம மறைச்சுடறாங்க.)


அப்புறம்....

அப்புறம்...

அய்யோ என்னங்க கதை மறந்து போச்சு... என்ன பண்றது... ஒன்னும் புரியலையே...

ஏங்க நீங்க கொஞ்சம் சொல்றீங்களா???... இல்லன்னா எனக்கு சினிமாவுல கெடச்ச சான்ஸே போய்டுங்க. கொஞ்சம் உதவி பண்ணுங்க...


Disclaimer : இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கரு அனைத்தும் கற்பனையே. யாரையும், எந்த சமூக அமைப்புகளையும், உறவு முறைகளையும் இழிவு படுத்த அல்ல.(கதையின் கருவுக்காக என்ன பின்னூட்டத்துல போட்டு தாக்கிடாதீங்கப்பா சாமி. இந்தப் பதிவு புண்படுத்துவதாகவோ ஒவ்வாததாகவோ இருந்தால் எனக்கு தயவு செய்து இமெயில் அனுப்புங்கள். தூக்கி விடுகிறேன் பதிவை )

கலியுகக் கர்ணன் - வார்ன் பப்பே


வார்ன் பப்பே (Warren Buffet) பற்றி சமீபத்தில் CNBC ஒளி பரப்பினார்கள்.

Berkshire Hathway என்ற நிறுவனத்தின் CEO வாக இருக்கும் இவர் பில்கேட்சுக்கு அடுத்த உலகின் இரண்டாவது பணக்காரர்.

இதில் என்ன விஷேசம் என்றால் தன்னுடைய 80% சதவீதம் வருமானத்தை (37 பில்லியன் டாலர்) Bill and Melinda Gates Foundation என்ற சேவை நிறுவனத்திற்காக நன்கொடை அளித்துள்ளார்.

தற்போது 76 வயதான பப்பேவின் நடைமுறை வாழ்க்கை வியக்க வைக்கிறது.

1) தன்னுடைய முதல் பங்கு முதலீட்டை பதினோராவது வயதில் ஆரம்பித்தார். இதுவே மிகத் தாமதம் என்று வருந்துகிறார்.

2) மிகவும் எளிமையான இவருடைய வீட்டிற்கு சுவர்களோ, தடுப்போ எதுவும் கிடையாது.

3) உலகிலேயே மிகப் பெரிய தனியார் விமான நிறுவனத்திற்கு முதலாளியாக இருந்தும் கூட, ஒரு போதும் தனியார் விமானத்தில் பயணித்ததில்லை.

4) தன்னுடைய காரை தானே ஓட்டிச் செல்லும் இவருக்கு பிரத்யேகமான பாதுகாப்பு எதுவும் தேவைப்படவில்லை.

5) இவருடைய வீட்டில் கம்ப்யூட்டரோ, ஏன் செல்போன் கூட கிடையாது.

6) இவர் தன்னுடைய கம்பனிக்கு வருடத்திற்கு ஒரு கடிதம் மட்டுமே எழுதுவார்.

7) இவர் கம்பனி CEO க்களுக்கு இரண்டே இரண்டு விதிகள் தான்.

விதி ஒன்று, வாடிக்கையாளரின் பணத்தை எப்பொழுதும் இழக்கக் கூடாது.

விதி இரண்டு, விதி ஒன்றை மறக்கக் கூடாது.

8) பில்கேட்ஸ் இவரை முதல் முறை சந்தித்த பிறகு, இவருடைய சிஷ்யனாகிவிட்டார்.

இப்படி பிரமிக்க வைக்கும் இவருடைய வாழ்க்கையை நோக்கும் போது, சாதாரணமான நானே (நாமே?) மிக ஆடம்பரமாக வாழ்வதாகப் பட்டது.

ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.(எம்ஜியார் படம். எழுதியவர் யாரென்று தெரியவில்லை)
இந்தப் பாடல் வரிகள் இவரிடம் தோற்றுப் போகின்றன.

பொருள் கொண்ட பேர்க்கு மனம் வந்ததில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை.

இவர் பணத்தில் வேண்டுமானால் இரண்டாவது இடத்தில் இருக்கலாம்.

ஆனால் குணத்தில்...???!!!

நன்றி விக்கிபீடியா

சின்னப் பசங்களுக்கு குசும்பு ஜாஸ்தி?

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



ஒவ்வொருத்தரும் ஒரு சிலதுக்கு பயப்படுவாங்க.

குறிப்பா சின்ன வயசுல பேய் பிசாசு ன்னு பயமுறுத்திடுவாங்க.

ஒழுங்கா சாப்பிடலன்னா பூச்சாண்டி புடிச்சுக்குவான்னு சாப்பிட சொல்வாங்க.

பூஜைக்கு வச்சிருந்ததை சாப்பிட்டா சாமி கண்ண குத்தும்னுவாங்க.

வீட்டுக்கு வெளியில மாட்ற திருஷ்டி பொம்மைய கண்டா கூட பயமா இருக்கும்.

ஸ்கூலுக்கு போனா வாத்தியார் பயமுறுத்தறது வேற.

இதையெல்லாம் தாண்டி ஒரு சில சமயத்துல கண்ணாடியில நம்ம மூஞ்சியே நம்மளுக்கு பயமாயிருக்கும்?!.

இப்படி பயமே வாழ்க்கையா போச்சு...

இந்தப் படத்த பாருங்க. இந்தக் குழந்தை எதப் பாத்து பயப்படுதுன்னு...




இருந்தாலும் இந்தக் காலத்து பசங்களுக்கு குசும்பு ரொம்ப ஜாஸ்தி இல்ல?!...