ஞாநியும் செக்ஸ் கல்வியும்

சில பேர் எழுதலாங்கறாங்க. சில பேர் கூடாதுங்கறாங்க. நம் நாட்டில் பாலியல் பற்றியும், பாலியல் கல்வி பற்றியும் போதிய விழிப்புணர்வும், புரிதல்களும் இல்லை.

நாம சொல்ல வந்த விடயத்துக்கு வருவோம்.

சில தொழில்கள் செய்பவர்களை Professionals என்று சொல்வோம். மருத்துவர்கள், பொறியாளர்கள் ஆகியோர். இது சம்பந்தப் பட்ட செயல்களை இவர்கள் தான் செய்ய வேண்டும். குறிப்பாக மருத்துவர்கள். ஏனென்றால் இதனால் ஏற்படும் விளைவுகள் மீளப் பெற முடியாதவை.

செக்ஸ் கல்வியும் இது போலத் தான். இதற்கு முறையான மருத்துவர்கள் மட்டுமே ஆலோசனை சொல்ல முடியும். சொல்ல வேண்டும். ஒரு பதிவர் எழுதி இருக்கிறார் அனுபவ அறிவு இருந்தால் போதும் என்று. யாருக்கு இல்லை இங்கு அனுபவம். உங்களுக்கிருக்கிறது. எனக்கிருக்கிறது. ஆனால் அனுபவம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசப் படுகிறது இல்லையா. அப்பதிவரின் அனுபவத்தை எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள்.

//ரொம்ப முக்கியம், பரம ரகசியமாகச் செயல்படவேண்டும். மாட்டிக் கொள்ளக் கூடாது. என்னதான் இருந்தாலும் இப்போது இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையானவை. ஆகவே மாட்டிக் கொள்ளக் கூடாது.//

//ஒரு மாதவிடாய் வந்தால் அதற்கு முன் எவ்வளவு உடலுறவு கொண்டாலும் கணக்கில் வராது. ஆகவே தேவையில்லாது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டாம்.//

எனக்கு கூட ஜுரம் வந்தால் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று அனுபவ அறிவு இருக்கிறது. இருந்தாலும் நாம் ஏன் மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஜூரம் என்பது மற்ற நோய்களுக்கான முன்னறிவிப்பே. இது மருத்துவரால் மட்டுமே சரியாக கண்டறியப் பட்டு அதற்கேற்றார்போல் மருந்து கொடுக்கப் படுகிறது. இது திருப்பதியில் போய் மொட்டையைத் தேடும் கதையில்லை.

முறையான மருத்துவக் கல்வியும் ,அறிவும், தேர்ந்த அணுகுமுறையும் இன்றி பாலியல் கல்வி கற்பிக்கப் பட்டால், தவறான பின் விளைவுகளையே ஏற்படுத்தும்

ஞாநி ஒரு பத்திகையாளராக இருக்கலாம். ஆனால் அவர் செக்ஸ் கல்வி (கவனிக்கவும்) பற்றி எழுதுவது என்பது சுயவைத்தியம் பார்ப்பது போலாகும்.

அனுராதா ரமணன் அந்தரங்க ஆலோசனை சொல்வதற்கும், மாத்ருபூதம் ஆலோசனை சொல்வதற்கும் வித்தியாசமில்லையா?

அனுராதா ரமணனுக்கு சமூகப் பார்வை. மாத்ருபூதத்திற்கு மருத்துவப் பார்வை.

மற்றபடி, யார் வேண்டுமானாலும் பத்திரிகையாளனாகலாம். எழுத்தாளனாகலாம். பொறியாளராகலாம். (எங்க ஊர் மேஸ்திரி எட்டு கூட தாண்டல. ஆனா சூப்பரா வீடு கட்டுவாரு.)

ஆனால் மருத்துவராக முடியாது. அதைப் பற்றி எழுத முடியாது என்பது என் புரிதல்.