SMS தத்து(பித்து)வங்கள்

இந்த தத்துவம் இருக்குதே தத்துவம் அது எப்ப வேணா வருங்க.

பெரும்பாலும் நம்ம பசங்க லவ் பெயிலாயி தாடிய வெச்சுகிட்டு வுடுவானுங்க பாருங்க..... அது தத்துவம்.



கீழே உள்ள தத்து(பித்து)வங்களைப் பாருங்கள்...


இஞ்ஜீனியர் காலேஜ்ல படிச்சா இஞ்ஜீனியர் ஆகலாம். பிரசடென்சி காலேஜ்ல படிச்சா பிரெசிடண்ட் ஆக முடியுமா? (ஆஹா.. கெளம்பிட்டாங்கய்யா)

ஆட்டோக்கு ஆட்டோன்னு பேரு இருந்தாலும்...மேனயுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்...(இது கண்டுபிடிப்பு)

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்... ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது...(என்ன கொடுமை சார் இது)

வாழை மரம் தார் போடும்... ஆனா அதை வச்சு ரோடு போட முடியுமா? (ரோடே போடாம பில் போடராங்க)

ஹேண்ட் வாஷ் என்றால் கை கழுவுவது...பேஸ் வாஷ் என்றால் முகம் கழுவுவது...அப்போ பிரெயின் வாஷ் ன்னா பிரெயினை கழுவுவதா? (இருந்தாத்தானே கழுவுறதுக்கு)

டீ கப்ல டீ இருக்கும். அப்ப வோர்ல்ட் கப்ல வோர்ல்ட் இருக்குமா? (போதும்டா சாமி)

செல் மூலமா எஸ் எம் எஸ் அனுப்பலாம்... ஆனா எஸ் எம் எஸ் மூலமா செல் அனுப்ப முடியாது.(ஹி ஹி ஹி)

பால் கோவா பாலில் இருந்து பண்ணலாம். ஆனா ரசகுல்லா ரசத்தில் இருந்து பண்ண முடியுமா??? (தாங்கல. என்ன வுட்ருங்க)

பல் வலி வந்தால் பல்ல புடுங்கலாம்.ஆனா கால் வலி வந்தால் காலை புடுங்க முடியுமா? இல்ல தலை வலி வந்தால் தலையை தான் புடுங்க முடியுமா?? (திஸ் ஈஸ் டூ மச்)

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...

சண்டே அன்னிக்கி சண்டை போட முடியும்... மண்டே அன்னிக்கி மண்டைய போட முடியாது... (ஹய்யோ.. ஹய்யய்யோ.. ரத்தம் வருது... வேணா அழுதுருவேன்)

லேட்டஸ்ட் காமடி இன் தேன்கூடு

ஒரு பதிவை எழுதிவிட்டு தேன்கூட்டில் இடுகையைப் புதுப்பித்தால் சம்பந்தமே இல்லாத படங்கள் என் பதிவில்....


இங்கே பார்க்கவும்


என் பதிவில் நான் போட்ட படங்கள் வேறு. தேன்கூட்டில் தெரிவது வேறு.

பதிவைப் படிப்பவர்கள் குழம்பக் கூடிய சூழ்நிலை.

தேன்கூட்டில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா??

கீழே உள்ள படங்கள் எந்த அலுவலத்தின் கட்டிடம் தெரியுமா???











ஆஸ்திரியா நாட்டின் சிறைச்சாலை தான்........

என்ன ஒரு ரவுண்ட் போய் வரலாமா???!!!

நவீன அறிவியல் சாதனங்கள்

நவீன அறிவியல் சாதனங்கள் இன்றைய வாழ்வில் அத்தியாவசியமானது. தவிர்க்கமுடியாதது. அதை உபயோகமாகவும், அல்லாமலும் கையாள்வது அவரவர் கையில்.

ஆனால் தவறான இடத்தில் தவறான சாதனங்களை உபயோகப் படுத்தினால் இப்படித்தான் நடக்கும்.





செல்போனை தூக்கியெறியும் இவரைப் பார்த்து அழுவதா சிரிப்பதா???!!!

சரிதானே?

பெ(பே)ய்யெனப் பெய்யும் மழை

கால நிலை மாற்றங்களினால் மழை பெறும் பகுதிகளில் வறட்சியும், வறட்சியான பகுதிகளில் மழையும் ஆகிய மாற்றங்கள் நாம் அறியாததல்ல. ஒரு காலத்தில் மழை என்பதை ஏட்டில் மட்டுமே படித்த வளைகுடா மக்கள் இன்னும் வரும் காலங்களில் விவசாயம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

செய்தி.....சமீபத்தில் சவுதியில் மிகக் கடுமையான மழை பெய்தது.


சரியான வடிகால் வசதிகள் இல்லாத்தால், ஏற்பட்ட மழை நீர் வெள்ளம் தான் இங்கே நீங்கள் காண்பது.....




இதுலர்ந்து என்னா தெரியுதுன்னா....நாம போற எடமெல்லாம் நல்லா மழை பெய்யுதுங்க.

வாழ்க்கையின் கடைசி(?) படம்


கடவுளை நம்புபவர்கள் இருக்கிறார்கள். நம்பாதவர்களுக்கும் இருக்கிறார்கள். இதற்குத் தான் இந்த பூமியில் எத்தனை மரணங்கள், சண்டைகள், சச்சரவுகள், இன்னும் எத்தனை எத்தனைகள்........

ஆனால் இயற்கையின் சீற்றங்களுக்கு முன் நாம் எந்தளவு சிறியவர்களாகிப் போகிறோம் என்பதை உணர்த்தும் இந்தப் படம் 2004ம் வருடம் சுமத்ரா தீவில் சுனாமி தாக்க ஒன்றரை விநாடிகளுக்கு முன்பு எடுக்கப் பட்டது.

இந்தப் படம் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ஒரு டிஜிட்டல் கேமராவில் பதிவாகி இருந்தது. (அலையின் உயரம் 105 அடிகள் தோராயமாக 32 மீட்டர்)

இதை எடுத்தவர் உயிரோடு இருப்பாரா என்பது கேள்விக் குறியாகவும், வருத்தமாகவும் உள்ளது.

இன்று அவர்/அவள் எடுத்த வாழ்க்கையின் கடைசி(?) படம் நம் கண்முன்னே......

இந்தப் புத்தாண்டில் மதங்கள் மடிந்து மனிதம் மட்டுமே வாழட்டும்...

வாழ்க்கை வாழ்வதற்கே!!!!.

அலைகள் ஓய்வதில்லை...

இந்த வலைப்பதிவு என்னுடைய நான் பேச நினைப்பதெல்லாம் என்ற பதிவின் தொடர்ச்சி. சில பல காரணங்களால் அப்பதிவினை தொடர முடியாமல் போனது.

வலைப்பதிவு தொடர்ந்து எழுதுதல் என்பது மிகச் சிரமமான காரியமே. தொடர்ந்த வேலை மாற்றங்கள், இணையத் தொடர்பின்மை இன்னும் பிற.....

மேலும் இதே பெயரில்ஏற்கனவே ஒரு வலைப் பதிவு இருப்பது தாமதமாக அறிய வந்தது. இது முற்றிலும் என்னுடைய பிழையே. சம்பந்தப்பட்டவர் மன்னிப்பாராக!.

மீண்டும் சந்திப்போம்.......