கலியுகக் கர்ணன் - வார்ன் பப்பே


வார்ன் பப்பே (Warren Buffet) பற்றி சமீபத்தில் CNBC ஒளி பரப்பினார்கள்.

Berkshire Hathway என்ற நிறுவனத்தின் CEO வாக இருக்கும் இவர் பில்கேட்சுக்கு அடுத்த உலகின் இரண்டாவது பணக்காரர்.

இதில் என்ன விஷேசம் என்றால் தன்னுடைய 80% சதவீதம் வருமானத்தை (37 பில்லியன் டாலர்) Bill and Melinda Gates Foundation என்ற சேவை நிறுவனத்திற்காக நன்கொடை அளித்துள்ளார்.

தற்போது 76 வயதான பப்பேவின் நடைமுறை வாழ்க்கை வியக்க வைக்கிறது.

1) தன்னுடைய முதல் பங்கு முதலீட்டை பதினோராவது வயதில் ஆரம்பித்தார். இதுவே மிகத் தாமதம் என்று வருந்துகிறார்.

2) மிகவும் எளிமையான இவருடைய வீட்டிற்கு சுவர்களோ, தடுப்போ எதுவும் கிடையாது.

3) உலகிலேயே மிகப் பெரிய தனியார் விமான நிறுவனத்திற்கு முதலாளியாக இருந்தும் கூட, ஒரு போதும் தனியார் விமானத்தில் பயணித்ததில்லை.

4) தன்னுடைய காரை தானே ஓட்டிச் செல்லும் இவருக்கு பிரத்யேகமான பாதுகாப்பு எதுவும் தேவைப்படவில்லை.

5) இவருடைய வீட்டில் கம்ப்யூட்டரோ, ஏன் செல்போன் கூட கிடையாது.

6) இவர் தன்னுடைய கம்பனிக்கு வருடத்திற்கு ஒரு கடிதம் மட்டுமே எழுதுவார்.

7) இவர் கம்பனி CEO க்களுக்கு இரண்டே இரண்டு விதிகள் தான்.

விதி ஒன்று, வாடிக்கையாளரின் பணத்தை எப்பொழுதும் இழக்கக் கூடாது.

விதி இரண்டு, விதி ஒன்றை மறக்கக் கூடாது.

8) பில்கேட்ஸ் இவரை முதல் முறை சந்தித்த பிறகு, இவருடைய சிஷ்யனாகிவிட்டார்.

இப்படி பிரமிக்க வைக்கும் இவருடைய வாழ்க்கையை நோக்கும் போது, சாதாரணமான நானே (நாமே?) மிக ஆடம்பரமாக வாழ்வதாகப் பட்டது.

ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.(எம்ஜியார் படம். எழுதியவர் யாரென்று தெரியவில்லை)
இந்தப் பாடல் வரிகள் இவரிடம் தோற்றுப் போகின்றன.

பொருள் கொண்ட பேர்க்கு மனம் வந்ததில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை.

இவர் பணத்தில் வேண்டுமானால் இரண்டாவது இடத்தில் இருக்கலாம்.

ஆனால் குணத்தில்...???!!!

நன்றி விக்கிபீடியா