சிங்கத்தைச் சுட்ட 'குடை'?

சற்றுமுன்னில் வந்த இந்த செய்தியைப் படித்தவுடன் ஏனோ எனக்கு எங்கோ படித்த இந்த ஜோக் தவிர்க்க முடியாமல் ஞாபகம் வந்தது.

ஏறக்குறைய 90 வயதான கிழவர் தன்னுடைய வருடாந்திர மருத்துவ சோதனைக்காக டாக்டரிடம் சென்றார்.

அவரை பார்த்த டாக்டர் " எப்படி இருக்கிறீர்கள்"

"நன்றாக இருக்கிறேன் டாக்டர். முக்கியமான விஷயம். என்னுடைய 20 வயது மனைவி கர்ப்பமாக உள்ளாள். அடுத்த மாதம் டெலிவரி" என்றார் மகிழ்ச்சியாக.

டாக்டர் சிறிது யோசனைக்குப் பின்னர் " ஒரு கதை சொல்லட்டுமா"

"எனக்கு தெரிந்த ஒருத்தர் நல்ல வேட்டையாடுபவர். தவறாமல் வேட்டைக்குச் சென்று விடுவார். இப்படித்தான் ஒரு நாள் வேட்டைக்கு கிளம்பும் போது, அவசரத்தில் துப்பாக்கிக்குப் பதிலாக குடையை எடுத்துச் சென்று விட்டார். காட்டில் அங்கே ஒரு சிங்கம் குகைக்கு வெளியே இருப்பது கண்டு, தன்னுடைய குடையை சிங்கத்துக்கு எதிராக பிடித்து 'டுமீல்'. சிங்கம் உடனே அடிபட்டு செத்து விழுந்தது."

குறுக்கிட்ட கிழவர் " முடியவே முடியாது. அதெப்படி குடையால் சுட முடியும். வேறு யாராவது சுட்டிருக்க வேண்டும்" என்றார்.


டாக்டர் " மிகச் சரியாக சொன்னீர்கள். அதைத் தான் உங்களுக்கும் சொல்ல வந்தேன்"