ஒரு தமிழ்ப் படத்துக்கான கதை (கிளைமாக்ஸ் மறந்து போய் தவிக்கிறேன்)


ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல மிகுந்த பிரயத்தனப்பட்டு நேரம் கேட்டிருக்கிறேன். அவர் பல படங்களை வெற்றிகரமாக தயாரித்தவர். அவரிடம் கதை சொல்வது மிகக் கடினம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். உங்களிடம் ஒருமுறை கதையைச் சொல்லி முன்னோட்டம் பார்த்துக் கொள்கிறேன்.

ஒரு ஊர்ல ஒரு அப்பா, அம்மா, பையன் இருந்தாங்க. பையனுக்கு ஒரு அஞ்சு வயசு இருக்கும். சந்தோஷமா இருக்காங்க. அப்போ குடும்பதோட ஒரு டைட்டில் சாங். சாங் முடிஞ்சவுடனே அம்மா ரெண்டாவது பிரசவத்துக்கு ஆஸ்பிடல்ல அட்மிட் ஆகறாங்க.

அதே சமயத்துல வேற ஒரு பார்ட்டியும் அட்மிட் ஆகறாங்க. ரெண்டு பேருக்கும் ஒரே சமயத்துல கொழந்த பொறக்குது. ரெண்டுமே பெண் குழந்தைங்க.ரொம்ப அழகா இருக்காங்க. அப்ப நர்சு கொழந்தைய சுத்தம் பண்ணி அந்தந்த அம்மாக்கள் கிட்ட வைக்கும் போது கொழந்தைங்க மாறிப்போயிடுது.

ரெண்டு அம்மாக்களுக்கும் கண்முழிச்சு பார்க்கும் போது பெட்ல இருக்கற கொழந்தையக் கண்டு சந்தோஷப் படறாங்க. தான் பெத்த கொழந்த தான்னு நெனச்சுக்கறாங்க.


பையன் (ஹீரோ) பெரிசு ஆயி அமெரிக்கால்லாம் போய் பெரிய?! படிப்பு படிச்சுட்டு ( அங்க ஒரு சாங் போட்டுரலாம்) இண்டியா திரும்பி வர்றார் பிளைட்ல. அதே பிளைட்ல நம்ம ஹீரோயினை மீட் பண்றார். எப்டீன்னா ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து சீட். அப்ப ஹீரோ தூங்கும் போது ஹீரொயின் மேல சாய்ஞ்சு விழறார்(உண்மையா தாங்க). அப்ப ஹீரோயின் டிஸ்டர்ப் ஆயி ஜெண்டிலா இருக்காங்க. மறுபடியும் தூங்கி மேல விழறார் ஹீரோ. இப்ப ஹீரோயின் டென்ஷனாயி ஏர்ஹோஸ்டஸ் கிட்ட கம்ப்ளெய்ன் பண்றாங்க. ஹீரோ கடுப்பாயிட்டு முறைக்கிறார் ஹீரோயினை.(சீக்குவன்ஸ் கரெக்டா வருதுங்களா)

ஆனா எதுவும் பேசிக்கல. மெட்ராஸ் ஏர்போர்ட்ல ஹீரோ மற்றும் ஹீரோயினோட பேரண்ட்ஸ் இவங்களை ரிசீவ் பண்ணும் போது ஹீரோவோட பேரண்ட்ஸ ஹீரோயினுக்கும், ஹீரோயினோட பேரண்ட்ஸ ஹீரோவுக்கும் அறிமுகம் செய்து வைக்கிறாங்க. வேற வழியில்லாம அறிமுகம் ஆயிக்கறாங்க. ( சொல்ல மறந்துட்டேனே ரெண்டு பேரோட அப்பாக்களும் ஒரே மாதிரியான பிஸினஸ் செய்றவங்க. போட்டின்னு வச்சுக்கங்க).

நம்ம ஹீரோ தன்னோட அப்பாவோட பிசினஸை பெரிய லெவெலுக்கு கொண்டு வர்றார். அமெரிக்காவுல படிச்சவரில்லையா...அப்புறம் ஒரு நாள் ஒரு ஓட்டல்ல உள்ள கிளப்புக்கு போறார். அப்ப ஹீரோயினும் அந்த ஓட்டலுக்கு வர்றாங்க.(கண்டிப்பா ஒரு குத்து பாட்டு கியாரண்டி). பாட்டு முடிஞ்சதும் வில்லங்க ஹீரோயின் கிட்ட தகறார் பண்ணப் போக, அத நம்ம ஹீரோ தடுக்க, பெரிய சண்டையெல்லாம் போட்டு ஹீரோயின டச் பண்ணிடறார்.(மனச தாம்பா)
ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் லவ்ஸ் ஸ்டார்ட் ஆயிடுது.(இப்ப பாட்டு வைக்கலன்னா நல்லா இருக்காது).

இந்த விஷயம் ரெண்டு பேரோட வீட்டுக்கும் தெரிய வர, கல்யாணத்துக்கு ஒத்துக்கிடறாங்க. ( ஹீரோயினோட அப்பா பிசினஸையும், சொத்தையும் குறி வச்சு கல்யாணத்துக்கு ஒத்துக்கிடறார்னு உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை)

இந்து முறைப்படி கல்யாணமும் ஆச்சு. இப்பத் தாங்க கதையில டர்னிங் பாயிண்டே வருது. அப்ப தான் ஒரு பெரிய அதிர்ச்சி தெரிய வருது. நம்ம கல்யாணப் பொண்ணு (ஹீரோயின்) வேற யாருமில்ல. தன்னோட சொந்தத் தங்கச்சி தான்னு. எப்படின்னா அந்தக் கல்யாணத்துக்கு அந்த நர்சம்மாவும் வந்திருக்காங்க. அவங்க தான் சொல்றாங்க. பிளாஷ்பேக் காட்றோம். (அவங்களுக்கு எப்படி தெரியுமுன்னா மெடிகல் ரிப்போர்ட் செக் பண்ணி பாக்கும் போது கொழந்தைங்க மாறியிருப்பது பாத்து ஷாக் ஆயிடறாங்க. அத வெளியில சொன்னா தன்னோட வேலை போய் விடுமோன்னு பயந்து யாருக்கும் தெரியாம மறைச்சுடறாங்க.)


அப்புறம்....

அப்புறம்...

அய்யோ என்னங்க கதை மறந்து போச்சு... என்ன பண்றது... ஒன்னும் புரியலையே...

ஏங்க நீங்க கொஞ்சம் சொல்றீங்களா???... இல்லன்னா எனக்கு சினிமாவுல கெடச்ச சான்ஸே போய்டுங்க. கொஞ்சம் உதவி பண்ணுங்க...


Disclaimer : இந்தக் கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கரு அனைத்தும் கற்பனையே. யாரையும், எந்த சமூக அமைப்புகளையும், உறவு முறைகளையும் இழிவு படுத்த அல்ல.(கதையின் கருவுக்காக என்ன பின்னூட்டத்துல போட்டு தாக்கிடாதீங்கப்பா சாமி. இந்தப் பதிவு புண்படுத்துவதாகவோ ஒவ்வாததாகவோ இருந்தால் எனக்கு தயவு செய்து இமெயில் அனுப்புங்கள். தூக்கி விடுகிறேன் பதிவை )

கலியுகக் கர்ணன் - வார்ன் பப்பே


வார்ன் பப்பே (Warren Buffet) பற்றி சமீபத்தில் CNBC ஒளி பரப்பினார்கள்.

Berkshire Hathway என்ற நிறுவனத்தின் CEO வாக இருக்கும் இவர் பில்கேட்சுக்கு அடுத்த உலகின் இரண்டாவது பணக்காரர்.

இதில் என்ன விஷேசம் என்றால் தன்னுடைய 80% சதவீதம் வருமானத்தை (37 பில்லியன் டாலர்) Bill and Melinda Gates Foundation என்ற சேவை நிறுவனத்திற்காக நன்கொடை அளித்துள்ளார்.

தற்போது 76 வயதான பப்பேவின் நடைமுறை வாழ்க்கை வியக்க வைக்கிறது.

1) தன்னுடைய முதல் பங்கு முதலீட்டை பதினோராவது வயதில் ஆரம்பித்தார். இதுவே மிகத் தாமதம் என்று வருந்துகிறார்.

2) மிகவும் எளிமையான இவருடைய வீட்டிற்கு சுவர்களோ, தடுப்போ எதுவும் கிடையாது.

3) உலகிலேயே மிகப் பெரிய தனியார் விமான நிறுவனத்திற்கு முதலாளியாக இருந்தும் கூட, ஒரு போதும் தனியார் விமானத்தில் பயணித்ததில்லை.

4) தன்னுடைய காரை தானே ஓட்டிச் செல்லும் இவருக்கு பிரத்யேகமான பாதுகாப்பு எதுவும் தேவைப்படவில்லை.

5) இவருடைய வீட்டில் கம்ப்யூட்டரோ, ஏன் செல்போன் கூட கிடையாது.

6) இவர் தன்னுடைய கம்பனிக்கு வருடத்திற்கு ஒரு கடிதம் மட்டுமே எழுதுவார்.

7) இவர் கம்பனி CEO க்களுக்கு இரண்டே இரண்டு விதிகள் தான்.

விதி ஒன்று, வாடிக்கையாளரின் பணத்தை எப்பொழுதும் இழக்கக் கூடாது.

விதி இரண்டு, விதி ஒன்றை மறக்கக் கூடாது.

8) பில்கேட்ஸ் இவரை முதல் முறை சந்தித்த பிறகு, இவருடைய சிஷ்யனாகிவிட்டார்.

இப்படி பிரமிக்க வைக்கும் இவருடைய வாழ்க்கையை நோக்கும் போது, சாதாரணமான நானே (நாமே?) மிக ஆடம்பரமாக வாழ்வதாகப் பட்டது.

ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.(எம்ஜியார் படம். எழுதியவர் யாரென்று தெரியவில்லை)
இந்தப் பாடல் வரிகள் இவரிடம் தோற்றுப் போகின்றன.

பொருள் கொண்ட பேர்க்கு மனம் வந்ததில்லை
தரும் கைகள் தேடி பொருள் வந்ததில்லை.

இவர் பணத்தில் வேண்டுமானால் இரண்டாவது இடத்தில் இருக்கலாம்.

ஆனால் குணத்தில்...???!!!

நன்றி விக்கிபீடியா

சின்னப் பசங்களுக்கு குசும்பு ஜாஸ்தி?

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



ஒவ்வொருத்தரும் ஒரு சிலதுக்கு பயப்படுவாங்க.

குறிப்பா சின்ன வயசுல பேய் பிசாசு ன்னு பயமுறுத்திடுவாங்க.

ஒழுங்கா சாப்பிடலன்னா பூச்சாண்டி புடிச்சுக்குவான்னு சாப்பிட சொல்வாங்க.

பூஜைக்கு வச்சிருந்ததை சாப்பிட்டா சாமி கண்ண குத்தும்னுவாங்க.

வீட்டுக்கு வெளியில மாட்ற திருஷ்டி பொம்மைய கண்டா கூட பயமா இருக்கும்.

ஸ்கூலுக்கு போனா வாத்தியார் பயமுறுத்தறது வேற.

இதையெல்லாம் தாண்டி ஒரு சில சமயத்துல கண்ணாடியில நம்ம மூஞ்சியே நம்மளுக்கு பயமாயிருக்கும்?!.

இப்படி பயமே வாழ்க்கையா போச்சு...

இந்தப் படத்த பாருங்க. இந்தக் குழந்தை எதப் பாத்து பயப்படுதுன்னு...




இருந்தாலும் இந்தக் காலத்து பசங்களுக்கு குசும்பு ரொம்ப ஜாஸ்தி இல்ல?!...