வாழ்க்கையின் கடைசி(?) படம்


கடவுளை நம்புபவர்கள் இருக்கிறார்கள். நம்பாதவர்களுக்கும் இருக்கிறார்கள். இதற்குத் தான் இந்த பூமியில் எத்தனை மரணங்கள், சண்டைகள், சச்சரவுகள், இன்னும் எத்தனை எத்தனைகள்........

ஆனால் இயற்கையின் சீற்றங்களுக்கு முன் நாம் எந்தளவு சிறியவர்களாகிப் போகிறோம் என்பதை உணர்த்தும் இந்தப் படம் 2004ம் வருடம் சுமத்ரா தீவில் சுனாமி தாக்க ஒன்றரை விநாடிகளுக்கு முன்பு எடுக்கப் பட்டது.

இந்தப் படம் ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு ஒரு டிஜிட்டல் கேமராவில் பதிவாகி இருந்தது. (அலையின் உயரம் 105 அடிகள் தோராயமாக 32 மீட்டர்)

இதை எடுத்தவர் உயிரோடு இருப்பாரா என்பது கேள்விக் குறியாகவும், வருத்தமாகவும் உள்ளது.

இன்று அவர்/அவள் எடுத்த வாழ்க்கையின் கடைசி(?) படம் நம் கண்முன்னே......

இந்தப் புத்தாண்டில் மதங்கள் மடிந்து மனிதம் மட்டுமே வாழட்டும்...

வாழ்க்கை வாழ்வதற்கே!!!!.